நற்செய்தி நண்பர்கள் உங்களை வரவேற்கிறோம்

நீலகிரி மாவட்டத்துக்கு ஒரு குடும்பம் பணியின் நிமித்தம் வந்த போது 2007ஆம் ஆண்டில் நற்செய்தி நண்பர்கள் ஐக்கியம் துவங்கியது. அவர்கள் வந்த இடம் தென்னிந்தியாவில் உள்ள தமிழ் நாட்டின் மலை மாவட்டமாகிய நீலகிரியில் மஞ்சூர் என்ற இடம். இந்த இடம் உதகமண்டலத்தில் இருந்து சுமார் 32 கிமீ தூரத்தில் உள்ளது.

ஆரம்பத்தில் இரண்டு நபர்களாக ஜெபத்திற்காக கூடினவர்களுடன் பல்வேறு பிண்ணனிகளில் உள்ளவர்கள் இணைந்துக் கொண்டார்கள். அவ்வாறு கூடி ஜெபிக்கும் போது கர்த்தர் எல்லோரையும் ஆசீர்வதித்தார்.

சங்கீதம் 133:1 சொல்லுகின்றபடி அந்த ஐக்கியம் மிகவும் நன்மையும் இன்பமுமாய் இருந்தது. நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டு இருந்தது.

அநேகருடைய வாழ்க்கை மாற ஆரம்பித்தது. இந்த கூடுகை கர்த்தரால் உண்டானது என்பதை கர்த்தர் உறுதிப்படுத்தினார். உபவாச ஜெபங்கள், ஆராதனை கூடுகைகள், சுவிசேஷ ஊழியங்கள் நடத்தப்பட்டது. ஜாதி, மத, இன வேறுபாடு இன்றி அநேகர் இந்த ஐக்கியத்தில் இணைந்துக் கொண்டார்கள்.

நம்முடைய நோக்கம் ஒவ்வொரு மனிதனையும் மனுஷியையும் கிறிஸ்து இயேசுவில் தேறினவர்களாய் நிறுத்துவது தான். மேலும் ஒவ்வொருவரும் தங்கள் பணி இடங்களில் சாட்சி உடையவர்களாய் வாழ்ந்து ஆண்டவரை குறித்து சாட்சி பகர வேண்டும்.

நீங்களும் எங்களோடு இணைந்து நம் ஆண்டவரை ஆராதிக்கலாம். சுற்றுலா பயணியாக நீங்கள் உதகைக்கு வந்தாலும் எங்களோடு சேர்ந்து நம் தேவனை துதிக்கலாமே.

கர்த்தர் உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பாராக.

Verse Of The Day
March 5, 2026
Give freely and spontaneously. Do not have a stingy heart. The way you handle matters like this triggers God, your Gods, blessing in everything you do, all your work and ventures.‖ Deut. 15:10 (Mes)

Promise Word 2025

Download Songbook

Android App

YouTube Subscription

Follow Us